V4UMEDIA
HomeGalleryCelebritiesகேப்டனை வணங்கி ஆசி பெற்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

கேப்டனை வணங்கி ஆசி பெற்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

49-ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகின் ‘சூப்பர் ஸ்டாராக’ வலம் வரும் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களும் தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி இடம்பிடித்துள்ளார்.

அவரது இயக்கத்தில் ‘3’, ‘வை ராஜா வை’ மற்றும் சமீபத்தில் ‘லால் சலாம்’ ஆகிய திரைப்படங்களும், ‘பயணி’ என்ற சுயாதீன பாடலும் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தனது தனித் திறமையான நடிப்பாலும் தலைசிறந்த பண்பாலும் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞரும் தேமுதிக-வின் தலைவருமான பத்மபூஷன் ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி மறைந்தார். அவரது 72-ஆவது பிறந்த நாள் கடந்த ஞாயிற்றுக்கிழமை(25-08-24) அன்று கொண்டாடப் பட்டதை முன்னிட்டு அவரது முழு உருவச் சிலை திறந்து வைக்கப் பட்டது.

அன்றைய தினம் அமரர்.’கேப்டன்’ விஜயகாந்த் வீட்டிற்கு சென்று கேப்டன் உருவப் படத்தை வணங்கியதுடன், தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடமும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் ஆசி பெற்று கலந்துரையாடினார்.

.

Most Popular

Recent Comments