HomeGalleryEventsஃபீனிக்ஸ்(வீழான்) திரைப்படத்தின் குறுமுன்னோட்ட(Teaser) வெளியீட்டு விழா!

ஃபீனிக்ஸ்(வீழான்) திரைப்படத்தின் குறுமுன்னோட்ட(Teaser) வெளியீட்டு விழா!

சண்டைப் பயிற்சி இயக்குனர் அனல் அரசு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக
அறிமுகம் ஆகும் பீனிக்ஸ்(வீழான்) திரைப்படத்தின் மூலம் குறுமுன்னோட்ட வெளியீட்டு விழா வரும் 16-ஆம் தேதி நடக்கிறது!

இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான சண்டைப் பயிற்சி இயக்குநரான அனல் அரசு, 12 ஆண்டுகளுக்கும் மேலாக சண்டைப் பயிற்சி கலைஞராக இருந்து சண்டைப் பயிற்சி இயக்குநராக மாறியவர்.தென்னிந்தியாவின் முன்னணி சண்டைப் பயிற்சி இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார். இவர் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி போன்ற மொழிகளில் உருவாகும் திரைப்படங்களுக்கு முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு சண்டைப் பயிற்சி இயக்குனராக பணியாற்றியுள்ளார். தமிழில் சிங்கம்-1,சிங்கம்-2, கத்தி, மெர்சல்,பிகில் உள்பட பல படங்களில் பணியாற்றியவர் மற்றும் அடுத்து வெளியாக உள்ள இந்தியன்-2 போன்ற மிகப்பெரிய படங்களில் பணியாற்றி உள்ளார்.

அதே போல மலையாளத்தில் உருமி, காம்ரேட்-இன்-அமெரிக்கா, ஷைலாக் மற்றும் தெலுங்கில் மிர்ச்சி,ஸ்ரீமந்துடு, ஜனதா கேரேஜ் போன்ற வெற்றி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இந்தியில் ரவுடி ரத்தோர்,தபாங்-2,தபாங்-3,சுல்தான்,ரேஸ்-3, சமீபத்திய மெகா ஹிட் திரைப்படமான ‘ஜவான்’ போன்ற பிரம்மாண்ட வெற்றி திரைப்படங்களிலும் பணியாற்றி உள்ளார். தற்போது விஜய் சேதுபதியின் மகனான சூர்யாவை கதாநாயகனாக அறிமுகப்படுத்துவதோடு, தானும் ஒரு இயக்குனராக ‘பீனிக்ஸ்[வீழான்]’ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகிறார். ஏகே பிரேவ்மேன் பிக்சர்ஸ் சார்பில் ராஜலக்ஷ்மி அரசகுமார் ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில் ‘பாலிவுட் பாட்ஷா’ என்றழைக்கப்படும் ‘ஷாருக்கான்’ நடிப்பில், ‘அட்லி’ இயக்கத்தில், ‘அனிருத்’ இசையில்,’அனல்’அரசு அவர்கள் சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றிய ‘ஜவான்’ திரைப்படம் ரூ.1400 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி பிரம்மாண்ட வெற்றி அடைந்தது. இத்திரைப்படத்திற்கு சண்டைப்பயிற்சி இயக்குனராக சிறப்பாக பணியாற்றியதற்காக பல்வேறு தளங்களிலும் இவருக்கு அங்கீகாரங்கள் கிடைத்து, அதற்கான விருதுகளையும் வென்றிருக்கிறார்.சமீபத்தில் ‘ஜவான்’ திரைப்படத்திற்காக ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2024-லும்,ஜீ சினி விருதுகள் 2024-லும் விருதுகளை வென்றுள்ளார். அனைத்திற்கும் உச்சமாக திரைப்பட சண்டை பயிற்சி துறைக்கு ‘ஆஸ்கர் விருது’ போன்ற ஒரு விருதான ‘டாரஸ் வேர்ல்ட் ஸ்டண்ட் விருது’களுக்கான(Taurus World Stunt Awards) பட்டியலில்
ஜான்விக் சாப்டர்-4, மிஷன்: இம்பாசிபிள்-டெட் ரெக்கனிங், எக்ஸ்ட்ராக்ஷன்-2, பேல்லரினா போன்ற திரைப்படங்களுடன் ‘ஜவான்’ திரைப்படமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, இவருக்கு ஒரு மிகப்பெரிய கௌரவமாகும்.

இந்நிலையில் ‘பீனிக்ஸ்[வீழான்]’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.இத்திரைப்படத்தில் சூர்யா, வரலக்ஷ்மி சரத்குமார், ஹரீஷ் உத்தமன், முத்துக்குமார், சம்பத், திலீபன், விக்னேஷ், வர்ஷா விஸ்வநாத், அபி நக்ஷத்ரா, சத்யா.என்.ஜே., ‘அட்டி’ரிஷி, பூவையார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்க, முன்னணி ஒளிப்பதிவாளரான R.வேல்ராஜ் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை கையாள்கிறார்.பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராகவும், கே.மதன் கலை இயக்குனராகவும், சத்யா.என்.ஜே ஆடை வடிவமைப்பாளராகவும், எம்.எஸ்.முருகராஜ் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

படத்தின் குறுமுன்னோட்டம்(Teaser) வரும் 16-ஆம் தேதி படக்குழுவினர் முன்னிலையில் வெளியிடப் படுகிறது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments