‘பா.ரஞ்சித்’ இயக்கத்தில் ‘சீயான் விக்ரம்’ நடித்து வரும் திரைப்படம் ‘தங்கலான்’. இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டூடியோ மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.
சீயான் விக்ரம் அவர்களின் 62-வது பிறந்த நாளான இன்று இத்திரைப்படத்தின் குறு முன்னோட்டத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‘தங்கலான்’ என்பதற்கு ஊர்க்காவல் என்பது பொருளாகும். இரவு நேரங்களில் ஊரை சுற்றி வருவது, அந்த ஊரை சாராதவர்கள் எவரும் ஊருக்குள் வந்தால் அவர்களை தடுத்து நிறுத்துவது, தேவைப்பட்டால் கிராமத்து தலைவருக்கு தகவல் தெரிவிப்பதும் இவர்களின் பொறுப்பாகும்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க,ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இன்று வெளியான குறு முன்னோட்டம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.