இயக்குனர் ‘வெற்றிமாறன்’ தயாரிப்பில், ‘கோபி நைனார்’ இயக்கத்தில், ‘இளையராஜா’ இசையில் வெளியாக இருக்கும் படம் ‘மனுஷி’ . நித்திரைப்படத்தில் ‘ஆண்ட்ரியா’, ‘நாசர்’ போன்றவர்கள் நடித்துள்ளனர்.

இத் திரைப்படத்தின் முன்னோட்டம் விறுவிறுப்பாகவும், காவல்துறை அதிகாரிகளின் விசாரிப்பு தன்மைகளையும் வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. விசாரணை அதிகாரிகள் ஒரு பெண்ணை எவ்வாறெல்லாம் கேள்வி கேட்கிறார்கள் மற்றும் அவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை இத்திரைப்படம் தெரிவிக்கிறது.

இத்திரைப்படத்திற்கு ‘எட்வின் சாக்கே’ ஒலிப்பதிவு செய்துள்ளார். ‘ஆண்டனி’ மற்றும் ‘ராமர்’ எடிட்டிங் பணிகளை செய்துள்ளனர். இத்திரைப்படம் கோபி நைனார் அவர்களின் இரண்டாவது திரைப்படமாகும். அவரது முதல் திரைப்படமான அறம் திரைப்படம் வெளியாகி ஏழு ஆண்டுகள் ஆகிய நிலையில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது.