தி கோட் திரைப்படத்தின் ஒரு புதிய போஸ்டரை தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்தார் ‘விஜய்’. அதில் அவர் கண்ணாடி அணிந்து, சாதாரண சட்டை அணிந்து, தாடியுடன் சால்டன் பெப்பர் லுக்கில் இருக்கிறார்.

ஒரு நகரத்தின் வானலை பின்னணியில் காண முடிகிறது மற்றும் போஸ்டரில் செப்டம்பர் 5 – ஆம் தேதி வெளியீடு என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். இத்திரைப்படத்தின் இயக்குனர் “வெங்கட் பிரபு’ ஈது வாழ்த்துக்களுடன் விநாயகர் சதுர்த்திக்கு வரோம் என்று தெரிவித்துள்ளார்.

இத் திரைப்படத்தில் ‘விஜய்’ இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். அவரது ஒரு வயதான தோற்றம் அளிக்கும் ஒரு கதாபாத்திரத்திற்காக தனித்துவப் பெற்ற தொழில்நுட்பம் செய்யப்பட்டுள்ளது. அந்த கதாபாத்திரத்திற்காக கிளீன் ஷேவ் செய்து இருக்கிறார். மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா,ஜெயராம், மீனாட்சி சௌத்ரி, மற்றும் யோகி பாபு ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.