
நடிகை சாக்ஷி அகர்வால், தமிழில் காலா, விஸ்வாசம், அரண்மனை-3 உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.

பென்சி புரொடக்ஷன்ஸின் தயாரிப்பில் மலையாளத்தில் வெளியாகவிருக்கும்
அதிரடியான த்ரில்லர் திரைப்படத்திற்காக மிகவும் பயங்கரமான சண்டைக் காட்சியில் நடித்துள்ளார்.அக்காட்சியை சண்டைப் பயிற்சி இயக்குனர் ஃபீனிக்ஸ் பிரபு இயக்குகிறார். தயாரிப்பின் போது பலத்த காயம் ஏற்பட்டாலும், காலில் ஏற்பட்ட காயத்துடன் சண்டைக் காட்சியில் இன்று முழு வீச்சில் நடித்து முடிக்கிறார்.

பெயரிடப்படாத இத்திரைப்படத்தில் அவர் மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மம்முட்டி அவர்களின் உறவினரான அஷ்கர் உடன் இணைந்து நடிக்கிறார்.ஷானு ஷமத் இப்படத்தை இயக்குகிறார்.