Home Gallery Celebrities ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பில் அதிவேகத்தில் காரை கவிழ்த்த அஜித்!

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பில் அதிவேகத்தில் காரை கவிழ்த்த அஜித்!

‘விடாமுயற்சி ‘படப்பிடிப்பில் ‘அஜித்’ கார் ஓட்டும் வீடியோ ஒன்றை அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அவரது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘அஜித்’ நடிக்கும் புதிய படத்திற்கு ‘விடா முயற்சி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் விறுவிறுப்பாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் பைக் பயணம் மேற்கொண்டு சில தினங்களுக்கு முன்பே சென்னை திரும்பினார் ‘அஜித்’. ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருக்கும் அஜித் அதிவேகத்தில் காரை ஓட்டுகிறார் அவர் அருகே நடிகர் ஆரவ் கைகள் கட்டப்பட்ட நிலையில் பதற்றத்துடன் அமர்ந்திருக்கிறார்.

இந்த காணொளியின் இறுதியில் கார் நிலை தடுமாறி கவிழ்ந்து விடுகிறது. இந்த சம்பவம் விபத்தாக நடந்ததா அல்லது படப்பிடிப்புக்காக காரை வேண்டுமென்றே கவிழ்த்தாரா அஜித் என்பது குறித்த தகவல்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.