மலையாளத் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்குபவர் அபர்ணா தாஸ். இவருக்கும் நடிகர் தீபக் பரம்போலுக்கும் இம்மாதம் திருமணம் நடைபெற உள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘ஞான் பிரகாஷன்’(Njan Prakashan) என்ற மலையாளத் திரைப்படம் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அபர்ணா தாஸ். அடுத்து அவர் ‘மனோஹரம்’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.தமிழில் தளபதி விஜயுடன் நடித்த ‘பீஸ்ட்’ மற்றும் ‘டாடா’ படங்கள் அவரைத் தமிழ் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தன.
கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான ‘மலர்வாடி ஆர்ட்ஸ் க்ளப்’ என்ற மலையாளத் திரைப்படம் மூலமாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் தீபக் பரம்போல்.
இவர் சமீபத்தில் வெளியான ‘கண்ணூர் ஸ்குவாட்’ மற்றும் மாபெரும் வெற்றி அடைந்த ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ ஆகிய திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.’மஞ்ஞுமல் பாய்ஸ்’ திரைப்படத்தில் சுதீப் கதாபாத்திரத்தின் மூலம் பரவலான கவனம் பெற்றார்.
இருவரும் ‘மனோஹரம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இருவருக்கும் வரும் ஏப்ரல்,24-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. அவர்களின் திருமண பத்திரிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.