நடிகர் திரு.போஸ் வெங்கட் அவர்கள் ‘கன்னிமாடம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் புது அவதாரம் எடுத்தார். சாதிக் கொடுமை மற்றும் ஆணவக் கொலை ஆகியவை பற்றி பேசிய இத்திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக போஸ் வெங்கட் ‘மா.பொ.சி’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தை எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.சிராஜ் தயாரிக்க விமல் கதாநாயகனாகவும் சாயாதேவி கதாநாயகி ஆகவும் நடிக்கின்றனர்.சாயாதேவி பிரபல இயக்குனர் யார் கண்ணனின் மகள் ஆவார். இவர் ஏற்கனவே கன்னிமாடம் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். படத்தின் முழு படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு முழு படத்தையும் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களிடம் போஸ் வெங்கட் அவர்கள் திரையிட்டு காண்பித்தார்.
படம் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்கு பிடித்துப் போகவே,அவர் தான் வெளியிட சம்மதிப்பதாக கூறியுள்ளார். தனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் படத்தை வெளியிடுகிறார்.படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. அதைப்பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.