உலக நாயகன் கமலின் மகளும், நடிகையும், இசையமைப்பாளருமான ஸ்ருதிஹாசன் அவர்களின் நடிப்பு மற்றும் இசையமைப்பில், உலகநாயகனின் வரிகளில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிமுகமாகும் ‘இனிமேல்’ என்ற ஆல்பம் பாடல் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் youtube-பக்கத்தில் கடந்த 25-ஆம் தேதி வெளியானது.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்,அனிருத் இசையில், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் தலைவர்-171 படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்க உள்ளதாகவும் அந்த படத்தை முடித்துக் கொடுத்தவுடன் உடனடியாக கைதி-2
படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் கூறினார்.