Home News Kollywood கேப்டன் மில்லர் டப்பிங் துவங்கிய பிரியங்கா மோகன்

கேப்டன் மில்லர் டப்பிங் துவங்கிய பிரியங்கா மோகன்

தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வாத்தி திரைப்படம் வெளியானது இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்கிற படத்தில் நடித்து வந்தார். கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

டாக்டர் டான் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு பிரியங்கா மோகன் நடிக்கும் படம் இது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் தன்னுடைய காட்சிகளுக்கான டப்பிங்கை பேச துவங்கியுள்ளார் பிரியங்கா மோகன். இது குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு அப்டேட்டையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார் பிரியங்கா மோகன்.