V4UMEDIA
HomeNewsKollywoodஜப்பானுக்கு கிடைத்த சென்சார் சான்றிதழ் விபரம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு

ஜப்பானுக்கு கிடைத்த சென்சார் சான்றிதழ் விபரம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு

கார்த்தி நடிப்பில் அவரது 25வது படமாக உருவாகி வருகிறது ஜப்பான் திரைப்படம். குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட கலைப்படைப்புகளை கொடுத்த இயக்குனர் ராஜுமுருகன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜி.வி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் வரும் தீபாவளி தினத்தன்று இந்த படம் வெளியாகிறது

இந்த நிலையில் இந்த படம் தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டப்பட்டது படத்தை பார்த்த அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். வரும் நவம்பர் 10ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்க முக்கிய வேடங்களில் சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

Most Popular

Recent Comments