V4UMEDIA
HomeNewsKollywoodஜிவி பிரகாஷ் நடிப்பில் கல்லூரி அரசியல் பேசும் படமாக உருவாகியுள்ள ரிபெல்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் கல்லூரி அரசியல் பேசும் படமாக உருவாகியுள்ள ரிபெல்

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஒரு பக்கம் பிசியான இசையமைப்பாளராக பல முன்னணி நடிகர்களின் படங்களின் இசையமைத்துக் கொண்டு இன்னொரு பக்கம் கதாநாயகனாகவும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். எப்படி இந்த இரண்டு கால நேரத்தையும் இவர் அழகாக சமாளிக்கிறார் என பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.

அந்த வகையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான அடியே திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து அவரது நடிப்பில் உருவாகியுள்ள ரிபெல் திரைப்படம் அடுத்ததாக திரைக்கு வர தயாராகி வருகிறது.

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் நிகேஷ் ஆர் எஸ் என்பவர் இயக்கியுள்ளார். கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்க கருணாஸ், சுப்பிரமணிய சிவா, கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்திருக்கிறார்கள்.

1980-ல் நடைபெற்ற சில உண்மை சம்பவத்தை தழுவி இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது. கல்லூரி மாணவர்களுக்கான அரசியலும் இதில் பேசப்பட்டு இருக்கிறது என்று கூறுகிறார். படத்தின் இயக்குனர் ஜி.வி பிரகாஷின் திரையுலக பயணத்தில் முக்கிய திருப்புமுனையை இந்த படம் ஏற்படுத்தும் எனது நம்பிக்கை தெரிவித்துள்ளார் இயக்குனர் நிகேஷ். அவர் கூறியபடி சமீபத்தில் சிம்பு வெளியிட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை பார்க்கும்போது அதை உறுதிப்படுத்துவது போல தான் அமைந்துள்ளது.

Most Popular

Recent Comments