V4UMEDIA
HomeNewsKollywoodரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக வெளியான லோகிவெர்ஸ் 2.0

ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக வெளியான லோகிவெர்ஸ் 2.0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றுள்ளது. படம் வெளியாகி ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 400 கோடிகளுக்கு மேல் வசூலித்து புதிய சாதனையையும் படைத்து வருகிறது.

இந்த படமும் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் என சொல்லப்படுகின்ற எல்சி யூவில் இணைந்து விட்டது. இந்த நிலையில் எல்சியூ வில் இணைந்துள்ள விக்ரம், கைதி, லியோ ஆகிய படங்களின் கருப்பொருள்களின் கலவையாக லோகிவெர்ஸ் 2.0 என்கிற பெயரில் ஒரு தீம் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதாவது விஜய்யின் லியோ படம் மட்டுமின்றி, கமலின் விக்ரம், கார்த்தியின் கைதி ஆகிய படங்களின் பின்னணி இசையும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் எல் சி யூவில் இணைந்துள்ள முக்கிய நான்கு கதாபாத்திரங்கள் விக்ரம், டெல்லி, லியோதாஸ் மற்றும் ரோலக்ஸ் ஆகியவையும் இந்த தீமில் இடம் பெற்றுள்ளனர்.

லியோவில் அதிரடியான இசை மூலம் அதிர வைத்த இசையமைப்பாளர் அனிருத் லோகிவெர்ஸ் 2.0 தீம் வீடியோ மூலமாக ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

Most Popular

Recent Comments