கமல் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. வியாபார ரீதியாகவும் ஒரு தயாரிப்பாளராக கமலுக்கு அபரிமிதமான வசூலை பெற்று தந்தது. ஆனாலும் அந்த படத்தை தொடர்ந்து அவர் பல படங்களில் நடிக்கிறார் என்கிற அறிவிப்புகள் மட்டுமே வெளியாகி வந்தன.
ஆனால் விக்ரம் படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் கமல் தனது புதிய படத்தின் படப்பிடிப்பு எதிலும் இதுவரை கலந்து கொள்ளவில்லை. அடுத்ததாக அவர் மணிரத்னம் டைரக்சனில் நடிக்க இருக்கிறார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் தான் அவர் முதலில் நடிக்கிறார் என்றும் சொலப்பட்டது.
அதே சமயம் கமலின் 234 வது படம் எப்போது துவங்கும் என்கிற கேள்வியும் இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் துவக்க விழா நடைபெற்றது. இதில் பங்கேற்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இசைக்கு ஏ.ஆர் ரஹ்மான் ஒளிப்பதிவு ரவி கே. சந்திரன், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், ஆக்சன் காட்சிகள் அன்பறிவ் மாஸ்டர்கள் என இந்த படத்திற்காக மணிரத்தினம்-கமல் கூட்டணியுடன் கைகோர்த்துள்ளனர்.