V4UMEDIA
HomeNewsKollywoodஆக்சன் விருந்தாக நவம்பர்-12 ஞாயிறன்று வெளியாகும் 'டைகர் 3'

ஆக்சன் விருந்தாக நவம்பர்-12 ஞாயிறன்று வெளியாகும் ‘டைகர் 3’

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ‘டைகர் 3’ டிரைலரை ஆதித்யா சோப்ரா வெளியிட்டதை தொடர்ந்து அது இணையத்தை புயலாக தாக்கி வருகிறது. மேலும் அந்த டிரைலரிலேயே இருக்கையின் நுனியில் அமர வைக்கும் ஆக்சன் திரில்லரான இந்த ‘டைகர் 3’ நவம்பர் 12 ஞாயிறு அன்று வெளியாகும் என்கிற அறிவிப்பையும் யஷ்ராஜ் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. டிரைலரை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

தீபாவளிக்கு இந்த படத்தை திரையிடும் விதமாக யஷ்ராஜ் பிலிம்ஸ் தனித்துவமான மற்றும் யுக்தியான சில திட்டங்களை வைத்திருக்கிறது. 2023  என்பது ‘ஆதிக் மாஸ்’ வருடம் என்பதால் பண்டிகை தேதிகள் குறித்த குழப்பங்களுக்கு அழைத்து செல்லக்கூடியது. நவம்பர் 13 புதிய சந்திரன்/ அம்மாவாசை நாள். நவம்பர் 14 கோவர்தன் பூஜாவுடன் சேர்த்து குஜராத்தியின் புது வருடமாகவும் அமைகிறது. நவம்பர் 15ல் பாய் தூஜ் என இவையெல்லாம் சேர்ந்து இந்த பண்டிகை கால விடுமுறை நாட்களில் படத்திற்கான ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஓட்டத்தை கொடுப்பதுடன் அந்த வார வசூலிலும் அதன் தாக்கம் வெளிப்படும்.

மனிஷ் சர்மா இயக்கியுள்ள ‘டைகர் 3’ திரைப்படத்தில் சல்மான்கான் கத்ரீனா கைஃப் மற்றும் இம்ரான் ஹாஸ்மி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். உலகம் முழுவதிலும் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

Most Popular

Recent Comments