HomeNewsKollywood“என் வாழ்க்கையை வேறு யாரும் படமாக்க வாய்ப்பு தர விரும்பவில்லை “ ; நடிகை சோனா...

“என் வாழ்க்கையை வேறு யாரும் படமாக்க வாய்ப்பு தர விரும்பவில்லை “ ; நடிகை சோனா அதிரடி

கடந்த 2000ல் சினிமாவில் நுழைந்து சிவப்பதிகாரம், குசேலன் உள்ளிட்ட படங்களில் நடித்து கவர்ச்சி நடிகை அறியப்பட்டவர் நடிகை சோனா. தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் கவர்ச்சி காட்சிகள் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள சோனா கடந்த 2010ல் கனிமொழி என்கிற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார். இந்த நிலையில் தற்போது ஸ்மோக் என்கிற வெப் சீரிஸை இயக்குவதன் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் நடிகை சோனா.

இந்த வெப் சீரிஸ் குறித்த அறிமுக விழாவில் அவர் பேசும்போது 2010ல் குமுதம் இதழுக்காக ஒரு கவர் ஸ்டோரி செய்ய ஆரம்பித்து அது கிட்டத்தட்ட 20 வாரத்திற்கு மேல் சென்று வரவேற்பு பெற்றது. அப்போதுதான் பத்திரிகையாளர் நண்பர் ஒருவர் இதையே நீங்கள் திரைப்படமாக உருவாக்கினால் என்ன என கேட்டார். அந்த கவர் ஸ்டோரியை புத்தகமாக உருவாக்கியபோது தான், நான் இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறேனா என ஆச்சரியப்பட்டேன். அதன்பின்னர் இந்த கதையை நேரம் கிடைக்கும்போது எல்லாம் டைரியில் எழுத துவங்கினேன். 2017-ல் டைரக்சன் கோர்ஸில் சேர்ந்து ஒளிப்பதிவு உள்ளிட்ட சில நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டேன்.

எனது நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்களிடம் இந்த கதையை சொன்னதுமே எல்லோருமே ஆச்சரியப்பட்டார்கள். அவர்களது ரியாக்ஷனை பார்த்து என்னை கிண்டல் செய்கிறார்களோ எனது தான் நினைத்தேன். ஆனால் அவர்களோ இது ஒரு நடிகையின் கதை மட்டுமல்ல ஒவ்வொரு பெண்ணும் தங்களுடன் தொடர்பு படுத்தி பார்க்கக்கூடிய படம் என்று பாராட்டி ஊக்கம் கொடுத்தனர். அதன் பிறகு தான் எனக்கென ஒரு டைரக்ஷன் குழுவை உருவாக்கினேன். எனக்கு நன்கு அறிமுகமான சில இயக்குநர்கள், ஒளிப்பதிவார்களிடம் இதுபற்றி கலந்து விவாதித்தேன். கதை ராவாக இருக்கிறதே என்று சொன்னார்களே தவிர யாரிடமும் இருந்து எந்த எதிர்மறை கருத்துக்களும் வரவில்லை.

இதை எழுதி முடித்ததும் இதை படமாக்க யாரை அணுகுவது என நினைத்த சமயத்தில் தான் எனக்கு ஒரு பெரிய தூணாக ஷார்ட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கை கொடுத்தது. இது ஒரு இயக்குநராக கிடைத்த வாய்ப்பு என்பது சொல்வதைவிட என்னுடைய கனவை, கதையை சொல்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள் என்றே சொல்வேன். இத்தனை வருடங்களில் நான்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அத்தனை பட இயக்குநர்களுக்கும் இந்த வெப்சீரிஸை அர்ப்பணிக்க விரும்புகிறேன். ஒரு நடிகையாக நான் அடுத்த கட்டத்திற்கு வளர தொடர்ந்து ஆதரவு தந்த நீங்கள் ஒரு இயக்குனராக வளரவும் எனக்கு வாய்ப்பு கொடுங்கள்.

இந்த வெப்சீரிஸை பல சீசன்களாக எடுக்கும் திட்டம் வைத்திருக்கிறேன். ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு விதமான நிகழ்வுகளை கதையாக உருவாக்கி இருக்கிறேன் இந்த முதல் சீசனில் எத்தனை எபிசோடுகள் எடுக்கப் போகிறேன் என திட்டமிடவில்லை. ஏதோ ஒரு காலகட்டத்தில் நடிகைகளின் கதைகளை யாராவது ஒருவர் படமாக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் என் கதையை அப்படி வேறு யாரும் சொல்லக்கூடாது என்பதால் நானே சொல்லி விடுகிறேன். ஆனால் இதில் 99 சதவீதம் உண்மையைத்தான் பேசப்போகிறேன். அதற்காக நீங்கள் என்னை கழுவி ஊற்றினாலும் பரவாயில்லை. இதில் நிஜமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவற்றின் பெயர்களை எல்லாமே மாற்றி இருக்கிறேன்.. இந்த கதை ஒரு உணர்ச்சிகரமான பயணமாக இருக்கும்.. இதை திரைப்படமாக எடுக்கலாமே என பலர் கேட்கின்றனர். இது நல்ல கதையாக இருந்தாலும் ராவாக இருப்பதால் சில பேருக்கு பிடிக்காது. ஆனால் ஓடிடியில் இதை சுதந்திரமாக உருவாக்கும் வாய்ப்பு இருக்கிறது” என்று கூறினார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments