HomeNewsKollywoodதீபாவளி ரெய்டுக்கு தயாராகும் விக்ரம் பிரபு

தீபாவளி ரெய்டுக்கு தயாராகும் விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு நடிப்பில் இந்த வருடம் பொன்னியின் செல்வன் 2 மற்றும் சமீபத்தில் இறுகப்பற்று என இரண்டு படங்கள் வெளியாகி உள்ளன. இதில் இந்த இரண்டு படங்களுமே வெற்றியைப் பெற்று விக்ரம் பிரபுவுக்கு புது உற்சாகத்தை அளித்துள்ளன.

இந்த நிலையில் விக்ரம் பிரபுவின் நடிப்பில் உருவாகியுள்ள ரெய்டு திரைப்படம் தீபாவளி பண்டிகை கொண்டாட்டமாக வெளியாக இருக்கிறது. சமீப காலமாக வெளியாகியுள்ள விக்ரம் பிரபுவின் படங்கள் பாராட்டுகளைப் பெற்று வருவதால் அவரது நட்சத்திர அந்தஸ்து மேலும் உயர்ந்துள்ளது.

இது ’ரெய்டு’ படத்திற்குமான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதால் தீபாவளிக்கு ஏற்கனவே இரண்டு படங்கள் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் மூன்றாவதாக அவற்றுடன் இந்த படம் மோதலில் இறங்குகிறது.

இருக்கை நுனியில் அமரும்படியான ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக ‘ரெய்டு’ உருவாகியுள்ளது. இந்தப் படத்தை கார்த்தி இயக்கியுள்ளார் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு வெள்ளக்கார துரை படத்தை தொடர்ந்து இந்த படத்தில் மீண்டும் விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேர்ந்திருந்தால் நடிகை ஸ்ரீதிவ்யா.

இந்த படத்திற்கு இயக்குனர் முத்தையா வசனம் எழுதியுள்ளார்.. சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments