V4UMEDIA
HomeNewsKollywoodவசந்த் ரவியின் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

வசந்த் ரவியின் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

தரமணி, ராக்கி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து ஓரளவு அறியப்பட்ட நடிகர் வசந்த் ரவி. ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் அவரது மகனாக நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகிவிட்டார் வசந்த் ரவி.

எங்கே சென்றாலும் ரஜினியின் மகன் என கோரும் அளவுக்கு ஒரு  அடையாளத்தை பெரும் பாக்கியமாக பெற்றுவிட்டார். இந்த நிலையில் அடுத்ததாக இன்னும் பெயரிடப்படாத படம் ஒன்றில் இவர் நடித்து வந்தார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

வசந்த் ரவியின் ஏழாவது படமாக சபரிஷ் நந்தா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சுனில், கல்யாண் மாஸ்டர், மெஹ்ரீன் பிர்சாதா மற்றும் அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் துவங்கிய படப்பிடிப்பு அக்டோபர் பத்தாம் தேதி நிறைவடைந்துள்ளது.

விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் தலைப்பு, போஸ்டர்கள், டீசர், டிரைலர் மற்றும் இதர அப்டேட்கள் அடுத்தடுத்து வரும் நாட்களில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

Most Popular

Recent Comments