சின்னத்திரையில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்கிற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு அதன் மூலம் நடிகர் ஆர்யாவின் மணப்பெண்ணாகவே பரபரப்பாக பேசப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபர்ணதி. அதன் பிறகு சினிமாவில் நுழைந்த இவர் ஜெயில் என்கிற படத்தில் நடித்தார் இந்த நிலையில் சமீபத்தில் வெளியான இறுகப்பற்று திரைப்படத்தில் விதார்த் ஜோடியாக ஒரு குடும்பத் தலைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அபர்ணதி.
படத்தில் நடித்த மூன்று கதாநாயகிகளில் அபர்ணதியின் நடிப்பும் இந்த படத்திற்காக அவர் தனது எடையை கூட்டி குறைத்து தோற்றத்தை மாற்றி நடித்துள்ளதும் ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தில் நன்றி அறிவிப்பு சந்திப்பில் உருக்கமாக பேசினார்ய அபர்ணதி.
“இந்த படத்தில் நடித்ததற்காக முதலில் நானே எனக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். படம் பார்த்த பார்வையாளர்கள் எந்த ஒரு குறையும் சொல்லவில்லை. படம் பார்த்துவிட்டு நிறைய பேர் என்னுடன் கனெக்ட் ஆகி தங்களுடைய உணர்வுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
இந்தப் படத்தின் மூலம் அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்ட என வடிவேலு சொன்னது போல என் வாழ்க்கையிலும் நடந்தது. நான் சினிமாவிற்காக முயற்சி செய்தபோது என்னுடைய தந்தையின் நண்பரின் மகன், சினிமாவிற்கு போய் நீ என்ன கிழிக்க போகிறாய் என்று கேட்டான். ஆனால் இன்றைக்கு துபாயில் இந்த படம் பார்ப்பதற்காக டிக்கெட் வாங்கி அதை கிழித்து போட்டு உள்ளே போய் படம் பார்த்தான். இப்போதுதான் சினிமாவில் வெற்றியை பார்க்கிறேன். இந்தப் படத்தில் கிளைமாக்ஸில் நான் அழுதது நிஜமான அழுகைதான். என்னடா டைரக்டர் இப்படி போட்டு வேலை வாங்குகிறாரே என்று நினைத்ததால் வந்து அழுகை என்று கூறினார்