பரபரப்பான, விறுவிறுப்பான, ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் விதமான படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் ஹரி. அவரும் விஷாலும் கூட்டணி சேர்ந்த தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் இன்றைக்கும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இடம் பிடித்திருக்கின்றன.
இந்த நிலையில் தற்போது விஷால் நடிக்கும் 33வது படத்திற்காக இவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
ஹரி படம் என்றாலே ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. கூடவே விஷாலும் சேர்ந்து கொண்டால் கேட்கவே தேவையில்லை. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சிக்காக ஹரி விஷால் கூட்டணியுடன் இணைந்துள்ளார் கனல் கண்ணன்.
ஏற்கனவே விஷாலுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ள இவர் இந்த படத்தில் மாஸான சண்டைக் காட்சியை அமைத்து வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க வருகிறார்.