துருவங்கள் பதினாறு ” படத்திற்கு பிறகு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்கள், கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரகுமான் இப்போது ‘சமாரா’ படத்திலும் அனைத்து தரப்பினரையும் வெகுவாக ஈர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

இந்த படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிகர் பரத் இணைந்து நடித்துள்ளார் தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் வரும் அக்டோபர் 13ஆம் தேதி வெளியாகிறது.

படம் பற்றி இயக்குனர் சார்லஸ் ஜோசப் கூறும்போதும், ஃபேமிலி செண்டிமெண்ட்டுடன் அறிவியல் கலந்து பரபரப்பான திரில்லர் படமாக இதை உருவாக்கியிருக்கிறோம். விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை அனைவராலும் நிச்சயம் பாராட்டப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. என்று கூறுகிறார்