HomeNewsKollywoodசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த ஜெயசூர்யா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த ஜெயசூர்யா

மலையாள திரை உலகில் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் ஜெயசூர்யா. தமிழில் என் மன வானில் மற்றும் கமல் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது திருவனந்தபுரத்தில் தலைவர் 170 படப்பிடிப்பில் கலந்து கொண்டு வரும் சூப்பர்ஸ்டார் ரஜினியை ஜெயசூர்யா நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

சிறுவயதிலிருந்தே ரஜினிகாந்தை  பார்க்க வேண்டும் என கனவு கண்டு வந்ததாகவும் அந்த நீண்ட நாள் கனவு தற்போது நனவாகி உள்ளது என்றும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஜெய சூர்யா.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments