கடந்த சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக் சுப்புராஜ் டைரக்ஷனில் சித்தார்த் பாபி சிம்ஹா நடிப்பில் ஜிகர்தண்டா படம் வெளியானது. வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியான இந்த படம் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்கிற பெயரில் உருவாகி உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் இணைந்து நடித்துள்ளனர்/ இந்த படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய எஸ் ஜே சூர்யா, “அதிகம் பேசாத சந்தோஷ் நாராயணன் அவர்களே இந்த மேடையில் நிறைய பேசியுள்ளார். இந்த படம் அவ்வளவு பேச வைத்துள்ளது. லாரன்ஸ் சார் நல்ல மனிதர். இந்த படத்தில் அவருடன் பணியாற்றியது ரொம்ப சந்தோஷம். கார்த்திக் சுப்பராஜ் சார் படைப்பும் காட்சிகளும் அப்படி இருக்கும். இறைவன் நல்ல நல்ல படைப்புகளை என்னை நோக்கி அனுப்பி வைக்கிறார். நான் இங்கு ஒரு நல்ல நடிகனா இருப்பதற்கு ‘இறைவி’ படம் மிகப்பெரிய காரணம். அதற்காக கார்த்திக் சுப்பராஜ் சார் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்”. என்றார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் பேசும்போது, “ஜிகர்தண்டா 1′ நான் பண்ணவேண்டியது. கதிரேசன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் கதை சொன்னார்கள். தெலுங்கு படத்தில் நான் பணியாற்றிக் கொண்டு இருந்ததால் அந்தப்படத்தை என்னால் செய்ய முடியவில்லை. நான் ரொம்ப மிஸ் பண்ணிவிட்டேன் என்று கவலைப்பட்டேன். அதற்கு கடவுள் கொடுத்த வாய்ப்பு தான் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. எனக்கு வாழ்க்கையில யாரெல்லாம் கற்றுக் கொடுக்கிறார்களோ அவர்களை நான் குரு என்று தான் சொல்லுவேன். பாலசந்தர் சார் கூட ஒரு படத்தில் பணியாற்றி இருக்கிறேன். ரஜினி சாரை நான் குரு என்று தான் சொல்லுவேன். கார்த்திக் சுப்பராஜும் இப்போது குரு தான்” என்றார்.