V4UMEDIA
HomeNewsKollywoodஆஸ்கர் வென்று வர 2018 பட இயக்குனரை வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

ஆஸ்கர் வென்று வர 2018 பட இயக்குனரை வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

கடந்த மே மாதம் மலையாளத்தில் 2018 என்கிற படம் வெளியானது. கடந்த 2018ல் கேரளாவில் ஏற்பட்ட பெரும் மழை வெள்ள பாதிப்பு குறித்தும் அதிலிருந்து கேரளா மக்கள் எப்படி மீண்டனர் என்பது அனைத்தையும் மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது.

கேரளாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலும் இந்த படம் திரையிடப்பட்து ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அது மட்டுமல்ல மலையாளத்தில் வெளியான படங்களில் அதிகம் வசூலித்த  படம் என்கிற சாதனையையும்  இது பெற்றது. இந்த படத்தை மலையாள இளம் இயக்குனர் ஜூட்   ஆண்டனி ஜோசப் என்பவர் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது கேரளாவில் திருவனந்தபுரத்தில் தனது 170 வது படத்திற்காக முகாமிட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டு வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை 2018 பட இயக்குனரும் தயாரிப்பாளர்களும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.

இந்த 2018 திரைப்படம் இந்த வருடத்தில் இந்திய சினிமாவில் இருந்து ஆஸ்கருக்கு செல்லும் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து படக்குழுமினரையும் இயக்குனரையும் வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆஸ்கருக்கு சென்று விருது பெற்று திரும்புங்கள் என்று மனதார பாராட்டி உள்ளார்.

Most Popular

Recent Comments