V4UMEDIA
HomeNewsKollywoodஜென்டில்மேன்-ll படப்பிடிப்பு துவங்கியது

ஜென்டில்மேன்-ll படப்பிடிப்பு துவங்கியது

கடந்த முப்பது வருடங்களுக்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த ஜென்டில்மேன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கே.தி.குஞ்சுமோன்,  இயக்குனர் ஷங்கர் இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் என அனைவருக்குமே அந்த படம் மிகப்பெரிய வெளிச்சம் போட்டுக் கொடுத்தது.

இந்த நிலையில் முப்பது வருடங்களுக்கு அடுத்து தற்போது ஜென்டில்மேன் 2 என்கிற பெயரில் அதன் இரண்டாம் பாகத்தை தயாரிக்கிறார் தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமோன் .இதில் நடிக்கும் நட்சத்திரங்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்-9) சத்யா ஸ்டுடியோவில் துவங்கியது. தமிழக தகவல் ஒளிபரப்பு மற்றும் செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு அமைச்சர் எம்.பி.சாமிநாதன் அவர்கள் ஸ்விட்ச் ஆன் செய்ய, எம்.ஜி.ஆர்-ஜானகி காலேஜ் மற்றும் சத்யா ஸ்டுடியோ தலைவர் டாக்டர்.குமார் ராஜேந்திரன் கிளாப் அடிக்க, கவிப்பேரரசு வைரமுத்து ஆக்‌ஷன் சொல்ல.. படபிடிப்பு ஆரம்பமானது.

முதல் காட்சியில், நாயகன் சேத்தன், நாயகி நயந்தாரா சக்ரவர்த்தி முதல் ஷாட்டில் பங்கு பெற்றனர். எனது ஆரம்ப காலகட்டங்களில் எம்.ஜி.ஆர் நடித்த பல படங்கள், சத்யா ஸ்டுடியோவில் வளர்ந்த சத்யா மூவீஸ் பல படங்களை நான் வினியோகம் செய்துள்ளேன். என் வாழ்க்கையின் உயர்வுக்கு முக்கிய பங்களித்த இந்த சத்யா ஸ்டியோவில் #ஜெண்டில்மேன்-ll படபிடிப்பு துவங்கியதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்..” என்றார் மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்..

தொடர்ந்து சென்னையிலேயே 25 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். சேத்தன், நயந்தாரா சக்கரவர்த்தி,பிரியா லால்,பிராச்சிகா,சித்தாரா,சுதா ராணி, ஸ்ரீ ரஞ்சனி, சத்யபிரியா, சுமன்,அச்சுத குமார், மைம் கோபி, புகழ் உள்ளிட்ட பல இந்த படத்தில் நடிக்கின்றனர்

Most Popular

Recent Comments