அருவி படத்தின் மூலம் கவனிக்கத்தக்க நடிகராக மாறியவர் மதன் தட்சிணாமூர்த்தி. பெரும்பாலும் அருவி மதன் என்றே அழைக்கப்படுகிறார். இவர் முதல்முறையாக இயக்குனராக மாறி நூடுல்ஸ் என்கிற படத்தை இயக்கியிருந்தார். சமீபத்தில் வெளியான அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இதுவரை வில்லனாக நடித்து வந்த ஹரிஷ் உத்தமன் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இந்த படம் ஓரளவு ரசிகர்களிடம் டீசன்டான வரவேற்பை பெற்ற நிலையில் இது குறித்து இயக்குனர் அருவி மதன் கூறும்போது ’நூடுல்ஸ்’ மக்கள் மத்தியிலும் ஊடகங்கள் மத்தியிலும் நேர்மையான பாராட்டைப் பெற்றது பெரு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுத்துள்ள போதிலும் பெரிய படங்களின் வெளியீட்டுக்கு மத்தியில் வரக்கூடிய சிறிய படங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் நூடுல்ஸ் படத்திற்கும் பாதிப்பை கொடுத்தது எனவும், ஆயினும் சிறிய படங்களை வெளியிடும் சமயத்தில் நாம் வழக்கத்தை விடவும் கூடுதலாக செய்ய வேண்டியது என்ன என்பதை பற்றிய ஒரு நல்ல புரிதல் கிடைக்கப் பெற்றது” எனவும் கூறினார்.