நடிகர் கமலின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். ஆனால் அவர் முதன்முதலில் சினிமாவில் நுழைந்தது ஒரு பாடகியாக மற்றும் தன்னை ஒரு இசையமைப்பாளராக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று தான்.
ஆனால் எதிர்பாராத விதமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏழாம் அறிவு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி உட்பட பல படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
அடுத்ததாக இவர் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்ஷனில் பிரபாஸ் ஜோடியாக நடித்துள்ள சலார் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது மீண்டும் தனது இசைக்கனவுக்கு உயிர் கொடுக்க இருக்கிறார் ஸ்ருதிஹாசன்,
ஆம்.. தனது தந்தை கமல்ஹாசன் இணைந்து ஒரு இசை ஆல்பத்தில் பணியாற்ற இருக்கிறார் ஸ்ருதிஹாசன். இந்த ஆல்பத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதுகுறித்த அடுத்த அப்டேட்டுகளை விரைவில் வெளியிட இருக்கிறார்கள். தந்தையும் மகளும் ஒரே இசை ஆல்பத்தில் இணைந்து பணியாற்ற இருப்பதால் இதுகுறித்து ஆர்வம் ரசிகர்களிலேயே அதிகரித்துள்ளது.