எப்போதுமே கதாநாயகர்களை தேடாமல் கதைக்கு ஏற்ற நடிகர்களை தேடுபவர் இயக்குனர் வெற்றிமாறன். அந்த வகையில் தான் இயக்கிய விடுதலை படத்திற்கு சூரி தான் பொருத்தமான கதாநாயகனாக இருப்பார் என முடிவு செய்து அந்த படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கினார். முதல் பாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. ஏற்கனவே முதல் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ ஆகியோர் நடித்திருந்தனர். இந்த இரண்டாம் பாகத்தில் அவர்களுடன், யாரும் எதிர்பாராத விதமாக நடிகை மஞ்சு வாரியர் இணைந்துள்ளார்.
அவர் மட்டுமல்ல கூடவே அட்டகத்தி தினேஷும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதுகுறித்த புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதற்கு முன் மலையாளத்தில் மட்டுமே நடித்தவர் தான் மஞ்சு வாரியர். வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்ததின் மூலம் தமிழ் திரை உலகில் அடியெடுத்து வைத்தார். முதல் படமே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததுடன் அவரது நடிப்பும் பாராட்டப்பட்டது.
அதை தொடர்ந்து தமிழிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் மஞ்சு வாரியர். இந்த நிலையில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் வெற்றிமாறன் படத்திலேயே மீண்டும் அவர் இணைந்து நடிப்பது ஹைலைட்டான