விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை காயத்ரி சங்கர். தொடர்ந்து விஜய் சேதுபதியின் பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்த இவர் சூப்பர் டீலக்ஸ், கமலின் விக்ரம் ஆகிய படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பாராட்டுகளை பெற்றார்.
அது மட்டுமல்ல கடந்த வருடம் மலையாளத்தில் ‘என்ன.. தான் கேஸ் குடு’ என்கிற படத்தின் மூலம் முதன்முதலாக அடி எடுத்து வைத்தார். குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடித்த அந்த படத்தில் அவரது மனைவியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் காயத்ரி.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவில் மலையாளத்தில் சிறந்த அறிமுக நடிகை என்கிற பிரிவில் காயத்ரிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் காயத்ரி