சினிமாவில் உள்ள 24 விதமான தொழில்நுட்ப பிரிவுகளையும் உள்ளடக்கி பெப்சி என்கிற தொழிலாளர் சம்மேளனம் இயங்கி வருகிறது. இருந்தாலும் அந்தந்த பிரிவுகளுக்கான தொழிலாளர்களை சேர்க்கும் பொறுப்பு அவர்களுக்கே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்போது தென்னிந்திய திரைப்பட & டிவி ஸ்டண்ட் இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் யூனியனில் உறுப்பினர்களாக, ஏற்கனவே யூனியனில் உறுப்பினர்களாக இருப்பவர்களின் வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்பளித்து வந்த நிலையில், தற்போது உறுப்பினர்களின் இரத்த சொந்தம் அல்லாத வெளி நபர்களுக்கும் வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பு இனி 10 வருடங்களுக்கு ஒரு முறை மற்றவர்களுக்கு கொடுக்கவும் யூனியன் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் முதன்முறையாக ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினராக சேருவதற்கு நன்கு ஸ்டண்ட் கலை பயிற்சி தெரிந்த வெளி நபர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட இருக்கிறது. இனி 10 வருடங்களுக்கு ஒரு முறை நன்கு ஸ்டண்ட் கலை பயிற்சி தெரிந்த வெளி நபர்களுக்கு வாய்ப்பளிக்க இருக்கிறது. அந்த வகையில் அடுத்த மாதம் அக்டோபர் 2023 ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. அதற்கான விண்ணப்பம் முதல் 21.09.2023 வழங்கப்படவுள்ளது இதற்கான தகுதிகள் கீழ்க்கண்டவாறு இருக்கவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1.: வயதுவரவு:18 முதல் 25 வரை 1.5.5 அடி உயரம் இருக்க வேண்டும்
2. 10 ஆம் வகுப்புக்குமேல் படித்திருக்க வேண்டும்
3. கார், பைக் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
4. நீச்சல் பயிற்சி, ஜிம்னாஸ்டிக், சிலம்பம், வால் பயிற்சி, தனித்திறமைகள்
குறிப்பு: யூனியனில் சேர விரும்பும் நபர் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் NOC பெற வேண்டும், அவர் பெயரில் எந்த ஒரு குற்ற செயலும் பதிவாகி இருக்க கூடாது என்பது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது