விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தில் விஷாலுக்கு சமமான கதாபாத்திரத்தில் எஸ்.ஜே சூர்யாவும் நடித்துள்ளார். சுனில், ரிது வர்மா, அபிநயா, ரெடின் கிங்க்ஸ்லி ஆகியோரும் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசரை நடிகர் விஜய் தனது இல்லத்தில் வைத்து வெளியிட்டு மார்க் ஆண்டனி படக்குழுவதற்கு மிகப்பெரிய கௌரவம் செய்தார். அதன்பிறகு மார்க் ஆண்டனியின் படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமானது.

இந்த நிலையில் படம் வெளியானதும் டைட்டில் கார்டை திரையில் பார்த்த அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி. காரணம் அதில் துவக்கத்திலேயே தளபதி விஜய்க்கு நன்றி என்று தனது நன்றிக் கடனை நிறைவேற்றியுள்ளார் விஷால். இதன் மூலம் விஜய் ரசிகர்களும் குஷியாகி மார்க் ஆண்டனி படத்தை பார்க்க ஆர்வம் காட்டி . வருகின்றனர்..