சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது . கிட்டத்தட்ட 600 கோடிக்கு மேல் வசூலித்து இதற்கு முன் உயர்ந்த பட்ச சாதனைகளாக இருந்த விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் வசூல் சாதனைகளை எல்லாம் ஓவர்டேக் செய்து நான் தான் நம்பர் ஒன் என நங்கூரமிட்டு அமர்ந்துள்ளது ஜெயிலர் திரைப்படம்.
இனி யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்கிற பேச்சே யாரிடமும் எழாத வண்ணம் சொல்லி அடித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த நிலையில் மலேசியாவிலும் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது ஜெயிலர் திரைப்படம்.
இதற்கு முன்பு வரை மலேசியாவில் வெளியான இந்திய திரைப்படங்களில் ஷாருக்கானின் தில்வாலே படம் தான் மலேசியாவில் அதிக வசூல் செய்த படமாக இருந்தது. தற்போது ஜெயிலர் திரைப்படம் அதை முறியடித்துள்ளது.
மலேசியாவில் மட்டும் சுமார் 25 கோடி வசூலித்துள்ளது ஜெயிலர் திரைப்படம். இந்த தகவலை மலேசியாவில் இந்த படத்தை வெளியிட்ட ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.