V4UMEDIA
HomeNewsKollywoodஅசோக் செல்வன் - கீர்த்தி சுரேஷ் திருமணம் இனிதே நடைபெற்றது 

அசோக் செல்வன் – கீர்த்தி சுரேஷ் திருமணம் இனிதே நடைபெற்றது 

தமிழ் திரையுலகில் நட்சத்திரங்களின் திருமணங்கள் அவ்வப்போது நடைபெற்று  வருகின்றன. அதில் சில திருமணங்களின் சிறப்பு என்னவென்றால்  திரை உலகிலேயே  ஒன்றாக பயணித்து  காதலித்து திருமணம் செய்து கொள்பவர்கள்  தான். அந்த வகையில் கடந்த வருடம் நடிகர் கவுதம் கார்த்திக் தன்னுடன்  படத்தில் கதாநாயகியாக நடித்த மஞ்சிமா மோகனை காதலித்து  திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் அடுத்ததாக புதிய காதல் ஜோடி நடிகர் அசோக் செல்வன்  நடிகை கீர்த்தி பாண்டியன் இருவரின்  திருமணம் தான் தற்போது  தமிழ் திரை உலகின் ஹாட் டாபிக். இந்த இருவருக்கும்  இன்று திருநெல்வேலி இட்டேரியில் உள்ள சேது அம்மாள் பண்ணை என்கிற இடத்தில் காலை 6 முதல் 7 மணிக்குள்   திருமணம் நடைபெற்றது.

அசோக் செல்வன் எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவில் நுழைந்து சூது கவ்வும் என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி நல்ல நல்ல படங்களை தேர்ந்தெடுத்து சமீபத்தில் வெளியான போர் தொழில் என்கிற வெற்றிப் படம் வரை  சினிமா ஏணியில் உயிரே உயரே சென்று கொண்டிருக்கிறார்.

நடிகை கீர்த்தி பாண்டியன் பிரபல நடிகர் அருண்பாண்டியனின் மகள். அவரும் அன்பிற்கினியாள், தும்பா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் புளூஸ்டார் என்கிற படத்தில் இணைந்து நடித்தபோது காதலிக்க துவங்கி தற்போது இரு வீட்டார் சமமதத்துடன் இனிதே திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். தம்பதியினருக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

Most Popular

Recent Comments