V4UMEDIA
HomeNewsKollywoodபெண்களுக்கு இலவசக் காட்சியாக திரையிடப்படும் அனுஷ்கா படம் 

பெண்களுக்கு இலவசக் காட்சியாக திரையிடப்படும் அனுஷ்கா படம் 

பாகுபலி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதுக்கு மிக நெருக்கமான நடிகையாக மாறியவர் அனுஷ்கா. அந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நிறைய படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இஞ்சி இடுப்பழகி என்கிற படத்தில் நடித்தபோது அவரது உடல் எடை கூடியதால் அதன்பிறகு அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்து போனது.

இந்த நிலையில் பழையபடி தனது உடற்கட்டை கட்டுக்குள் கொண்டு வந்து விட்ட அனுஷ்கா தற்போது வெளியாகி உள்ள மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ஓரளவு வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தை பெண்களுக்கு பிரத்யேகமாக திரையிட்டுக் காட்ட அனுஷ்கா உள்ளிட்ட படக்குழுவினர் விரும்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 14 (நாளை) ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் காலைக்காட்சி பெண்களுக்கு  சிறப்பு காட்சியாக திரையிடப்பட  இருக்கிறது.

இப்படி இலவச காட்சியை காண வரும் பெண்கள் மூலம் இன்னும்  ரசிகர்களிடம் இந்த படத்தை நெருக்கமாக கொண்டு போய் சேர்க்க முடியும் என அனுஷ்கா உள்ளிட்ட படக்குழுவினர்  கருதுகிறார்களாம்.

Most Popular

Recent Comments