V4UMEDIA
HomeNewsKollywoodரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ‘தலைவர் 171’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ‘தலைவர் 171’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் அதிரி புதிரி வெற்றி பெற்று மிகப்பெரிய வசூல் சாதனையையும் படைத்தது. இதற்கு முன்பு தர்பார் அண்ணாத்த என இரண்டு படங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பெரிய அளவில் கை கொடுக்காத நிலையில் அதையெல்லாம் தீர்க்கும் விதமாக ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றி  இதுவரை அவரை சுற்றி வளர்த்து வந்த சலசலப்புகளை எல்லாம் அடக்கி உள்ளது.

இதையடுத்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சூப்பர்ஸ்டார் நடித்து வரும் லால் சலாம் படம் வெளியாக இருக்கிறது. அந்த படத்தின் படப்பிடிப்பையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முடித்துவிட்டார்.

இதற்கு அடுத்ததாக ஜெய் பீம் புகழ் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்க உள்ள படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.  இது தவிர ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்று நீண்ட நாட்களாக சொல்லப்பட்டு வந்தது.

இந்தநிலையில்  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடிக்கிறார் என்கிற செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள.து ஜெயிலர் ஹிட் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் என்றும்  மாஸ்டர் அன்பறிவு இரட்டையர்கள் இந்த படத்திற்கு சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார்கள் என்றும் கூட இந்த அறிவிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

Recent Comments