V4UMEDIA
HomeNewsKollywoodஇசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி ; வருத்தம் தெரிவித்த ஏ.ஆர் ரஹ்மான்

இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி ; வருத்தம் தெரிவித்த ஏ.ஆர் ரஹ்மான்

‘மறக்குமா நெஞ்சம்’ என்கிற பெயரில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னையில் நடப்பதாக இருந்தது. கனமழை காரணமாக அந்த நிகழ்ச்சி செப்டம்பர் 10ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டு  நேற்று  கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யா ராம் பேலஸில் நடைபெற்றது  அளவுக்கு அதிகமான பார்வையாளர்களுக்கு டிக்கெட் விற்பனை   செய்யப்பட்டதால் நிறைய ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்க உள்ளே நுழைய முடியாமலேயே திரும்பிச் சென்றனர்.

முறையற்ற பார்க்கிங் வசதி மற்றும் நெரிசலை கட்டுப்படுத்த போதிய ஏற்பாடுகள் செய்யப்படாதது என பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள்  திரும்பிச் சென்ற ரசிகர்களால் கூறப்பட்டது. மேலும் இப்படி  சரியான ஏற்பாடுகளை செய்யாததற்கு ஏ.ஆர் ரஹ்மான் தனது  தரப்பில் இருந்து வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் நிகழ்ச்சியை பார்க்க முடியாதவர்களுக்கு அவர்களுக்கான கட்டணத்தை திருப்பித் தர வேண்டும் என்ற  கோரிக்கையையும் அவர்கள்   வைத்து சென்றனர்.

இந்த நிலையில் தற்போது ஏ.ஆர் ரஹ்மான்  இது குறித்து  ஒரு   ட்வீட் ஒன்றை  பதிவிட்டுள்ளார். அதில். “அன்பான சென்னை மக்களே..  சில துரதிர்ஷ்டமான  சூழல்கள் காரணமாக டிக்கெட் பெற்றிருந்தும் கூட நிகழ்ச்சியை பார்க்க உள்ளே நுழைய முடியாமல் திரும்பி சென்றவர்கள் தங்களிடம் இருக்கும் டிக்கெட்டின் ஒரு காபியை  இங்கே குறிப்பிட்டுள்ள மெயில் ஐடிக்கு அனுப்பி வைத்தால் எங்களது குழுவினர் அதை பரிசீலனை செய்வார்கள்” என்று  கூறியுள்ளார். 

மேலும் இந்த நிகழ்வு குறித்து ஒரு பேட்டியில் அவர் கூறும்போது, “இசை  நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்.. நேற்று நடந்த சம்பவங்களால் நான் மிகவும் வேதனை அடைந்தேன். கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு ஏற்ப வரும் காலங்களில் சென்னையில்  உலகத்தர  கட்டமைப்பு சுற்றுலா மேம்பாடு உள்ளிட்டவை சிறந்து விளங்க வாய்ப்புகளை வழங்க வேண்டும். போக்குவரத்து கூட்ட நெரிசலுக்கான மேலாண்மை, விதிகளை பின்பற்றும் ரசிகர்கள் அமைய வேண்டும். பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழ்நிலை நாம் உருவாக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments