HomeNewsKollywoodவினோத் படத்திற்காக  துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வரும் கமல்

வினோத் படத்திற்காக  துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வரும் கமல்

விக்ரம் படத்தின் தொடர் வெற்றியை தொடர்ந்து கமலின் திரையுலக பயணம் மீண்டும் சுறுசுறுப்பாகியுள்ளது. அந்த வகையில் கமல், சங்கர் கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகும் விதமாக போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதைத் தொடர்ந்து அவர் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார். ஆனால் அதற்கு முன்னதாகவே ஏற்கனவே திட்டமிட்டபடி இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில்  ஒரு படத்தில் நடிக்கிறார் கமல்.  அவர் நடிக்கும் 233 வது படமாக இது  உருவாகிறது.

இந்த படம் ஆக்சன் கதைக்களத்தில் உருவாகிறது இந்த நிலையில் இந்த படத்திற்காக துப்பாக்கிச் சூடும்  பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் கமல்.

இது குறித்த வீடியோ ஒன்றை  தற்போது  ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments