விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. எஸ்.ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மற்றும் சுனில், செல்வராகவன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இதன் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் சென்னையில் இதன் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து தற்போது மும்பையிலும் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளன. இதில் கலந்துகொண்ட நடிகர் விஷால் அதன்பிறகு அங்கு இருந்த சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்று இந்த படத்தின் வெற்றிக்காக தனது வழிபாட்டை செலுத்தினார். இதை தொடர்ந்து அவர் சென்னை திரும்பி உள்ளார் விஷால்.
இந்த படம் டைம் ட்ராவலை மையப்படுத்தி இரு வேறு காலகட்டத்தில் உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
நிச்சயம் இந்த படம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு படமாக இருக்கும் என்பதற்கு இந்த டிரைலருக்கு கிடைத்த வெற்றியே உதாரணம் என்று சொல்லலாம்.