விஷால், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் மார்க் ஆண்டனி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நான் சிவப்பு மனிதன் படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து ஜிவி பிரகாஷ் விஷால் இருவரும் மார்க் ஆண்டனி படத்தின் மூலம் இணைத்துள்ளனர்.

இந்த படத்தில் ஏற்கனவே டி ராஜேந்தர் பாடிய அதிருது பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து ஆதிக்க ரவிச்சந்திரன் பாடிய ஐ லவ் யூ டி பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து இந்த படத்தில் நான்காவது சிங்கிளான கருப்பண்ணசாமி பாடல் வரும் செப்-9ஆம் தேதி வெளியாக உள்ளது. தெலுங்கில் இந்த பாடல் வீரபத்திர சாமி என்கிற பெயரிலும் வெளியாக இருக்கிறது.