இசையமைப்பாளர்கள் சிலர் ஒரு காலகட்டத்தில் தங்களுக்குள் இருக்கும் படைப்பாளியை வெளியே கொண்டுவரும் விதமாக இயக்குநராக மாறும் ஆச்சர்ய நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெறுவது உண்டு. இதற்கு முன்னதாக இசையமைப்பாளர்கள் எஸ்.எஸ்.குமரன், விஜய் ஆண்டனி உள்ளிட்ட சிலர் டைரக்சனில் இறங்கி முத்திரை பதித்துள்ளனர்.
அந்த வரிசையில் மலையாளத்தில் எட்டு படங்களுக்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா நான்கு மொழிகளில் உருவாகும் ‘சிகாடா’ படத்திற்கு இசையமைப்பதுடன் இப்படத்தின் வாயிலாக இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் படம் தயாராகி வருகிறது படம் முழுவதும் பார்வையாளர்களை இருக்கை நுனியில் அமரவைக்கும் ஒரு சர்வைவல் திரில்லாராக ‘சிகாடா’ உருவாகியுள்ளது
தமிழில் இயக்குநர் விக்ரமன் படம் மூலமாக அறிமுகமாகி பிரபலமான மற்றும் பல தமிழ் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ள ரஜித் CR இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சுந்தர்.சியின் தலைநகரம்-2 படத்தில் வில்லனாக சிறப்பான நடிப்பை வழங்கியதன் மூலம் பிரபலமான ஜாய்ஸ் ஜோஸ் இப்படத்தில் இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். காயத்ரி மயூரா கதாநாயகியாக நடிக்கிறார்.
பெங்களூரு, சோலையூர், அட்டப்பாடி (தமிழக எல்லை), வாகமன் மற்றும் கொச்சி உள்ளிட்ட அழகான இடங்களில் ‘சிகாடா’வின் படப்பிடிப்பு நடை பெற்றிருக்கிறது இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார்