HomeNewsKollywoodநூறு குழந்தைகளின் சிகிச்சைக்காக ஒரு கோடி ரூபாய் நிதி அளித்த  காவேரி கலாநிதி மாறன் 

நூறு குழந்தைகளின் சிகிச்சைக்காக ஒரு கோடி ரூபாய் நிதி அளித்த  காவேரி கலாநிதி மாறன் 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று. கிட்டதட்ட 600 கோடிகளுக்கு மேல் வசூலித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தயாரிப்பு நிறுவனமே எதிர்பாராத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் இந்த படம்  பெற்றதை தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன்  படத்தின் ஹீரோ ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு விலை உயர்ந்த கார்களையும் லாபத்தில் குறிப்பிட்ட சதவீத பங்கு தொகையையும் அளித்து கௌரவப்படுத்தினார்,

இந்தநிலையில் அவரது மனைவி காவிரி கலாநிதிமாறன் வசதியற்ற 100 குழந்தைகளின்  இதய அறுவை  சிகிச்சைக்கான  செலவை தான் ஏற்றுக் கொள்ளும் விதமாக ஒரு கோடி ரூபாய்  நிதியை  அப்பல்லோ மருத்துவமனை  குழுமத்திற்கு  வழங்கியுள்ளார். இதற்கான காசோலையை  அப்பல்லோ குழுமத்தின்   சேர்மன் டாக்டர்  பிரதாப் ரெட்டியிடம் அவர் வழங்கினார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments