பாலிவுட்டில் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருப்பவர் நடிகர் ஷாருக்கான் கடந்த ஜனவரி மாதம் இவரது நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று ஆயிரம் கோடி வசூல் கிளப்பில் இணைந்தது.
இந்த நிலையில் தற்போது நம் தமிழ் இயக்குனர் அட்லீ டைரக்ஷனில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் நயன்தாரா கதாநாயகியாக, விஜய் சேதுபதி வில்லனாக, யோகி பாபு காமெடியனாக, அனிருத் இசையமைப்பாளராக என தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இணைந்துள்ளனர்.

ஒரு காலகட்டத்தில் சாக்லேட் ஹீரோவாக, குடும்ப அம்சம் கொண்ட படங்களிலும் நடித்து வந்த ஷாருக்கான் போகப்போக தன்னை ஒரு ஆக்சன் ஹீரோவாகவே மாற்றிக் கொண்டார்.. இப்போதும் தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடிப்பதற்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து வருகிறார். இப்படி ஆக்சன் படங்களில் நடிப்பதற்கு வித்தியாசமான காரணம் ஒன்றையும் கூறுகிறார் ஷாருக்கான்.

“ஆக்ஷன் படங்களை செய்வதை விரும்புவதற்கு ஒரே காரணம்.. என்னுடைய இளைய மகன் ஆப்ராம். அவர் ஆக்சன் -அனிம் மற்றும் சூப்பர் ஹீரோக்கள் கொண்ட படங்களை பார்க்க விரும்புவதால்.. அவருக்காக ஆக்சன் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்” என்கிறார்.















