HomeNewsKollywoodகுஷி  படத்தின் வெற்றியால் குஷியான விஜய் தேவரகொண்டா

குஷி  படத்தின் வெற்றியால் குஷியான விஜய் தேவரகொண்டா

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு தமிழிலும் அதே அளவிற்கு ரசிகர் பட்டம் இருக்கிறது. விஜய் தேவரகொண்டாவுக்கு கடந்த வருடம் அவரது நடிப்பில் வெளியான லைகர் திரைப்படம் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. அதேபோல நடிகை சமந்தாவுக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவரது சாகுந்தலம் படம் பெரிய வெற்றியை தரவில்லை.

இந்த நிலையில் தான் இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்திருந்த குஷி திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. தெலுங்கு இயக்குனர் சிவா நிர்வானா இயக்கியிருந்த இந்த படம் காதல் திருமணம், கணவன் மனைவிக்கான ஈகோ ஆகியவற்றை வேறு ஒரு கோணத்தில் அணுகி இருந்தது, இது ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதால் வெற்றி படமாக மாறியது,

இதனைத் தொடர்ந்து ஹீரோ விஜய் தேவரகொண்டாவும் கதாநாயகி சமந்தாவும் உற்சாகத்தில் இருக்கின்றனர். குறிப்பாக நடிகர் விஜய் தேவரகொண்டா இந்த வெற்றிக்காக தெலுங்கானாவில் உள்ள யாதார்த்தி கோவிலுக்கு சென்று தனது குடும்பத்துடன்  வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தி விட்டு வந்துள்ளார்

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments