இசையமைப்பாளர் தமன் எப்படியாவது விஜயின் படத்திற்கு இசையமைத்து விட வேண்டும் என்பதை கனவாக கொண்டிருந்தவர் கடந்த ஜனவரி மாதம் தெலுங்கு தமிழ் என இரு மொழிகளில் வெளியாகிய வாரிசு படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தன்னுடைய பல நாள் கனவை நிறைவேற்றிக் கொண்டார் தமன் அது மட்டுமல்ல அந்த படத்தில் அவரது இசையில் வெளியான ரஞ்சிதமே பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தற்போது யூ டியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் பார்க்கப்பட்டு மிகப்பெரிய சாதனை பாடலாக அமைந்துவிட்டது அந்த வகையில் விஜய் ரசிகர்களுக்கு பிடித்த இசையமைப்பாளர்களில் தமனும் தன்னை இணைத்துக் கொண்டு விட்டார் இந்த நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 68 படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருக்கிறார் வெங்கட் பிரபு என்றாலே யுவன் சங்கர் ராஜா என்பது மாற்ற முடியாத ஒன்று அது மட்டுமல்ல விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த கூட்டணி இணைந்துள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் இந்த படத்தில் தந்தையும் ப்ரோக்ராமராக இணைத்துக் கொண்டால் நான் மகிழ்ச்சி அடைவேன் விஜய் படத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று தனது வேண்டுகோளை யுவன் சங்கர் ராஜாவிற்கும் வெங்கட் பிரபுவிற்கும் வைத்துள்ளார் இசையமைப்பாளர் தமிழ்