சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவீரன் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள அயலான் திரைப்படம் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில் ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிக்கும் திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப நாட்களாக காஷ்மீரில் நடைபெற்று வந்தது. தற்போது அங்கே படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படக்குழுவினர் சென்னை திரும்பி உள்ளனர். இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.