திரையுலக பிரபலங்கள் பலரும் அவ்வப்போது மக்களின் உயிர்காக்கும் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்வுகளில் கலந்து கொண்டு தங்களது பங்களிப்பை தந்து வருகிறார்கள். அந்த வகையில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக சென்னையில் விழிப்புணர்வு பேரணி ஒன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஜெயிலர் புகழ் நடிகர் வசந்த் ரவி மற்றும் தற்போது சந்தானம் நடிப்பில் வெளியாக உள்ள கிக் மற்றும் சத்யராஜ், வசந்த் ரவி நடிப்பில் உருவாகி உள்ள வெப்பன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள தான்யா ஹோப் ஆகியோர் கலந்து கொண்டு இந்த பேரணியை துவங்கி வைத்தனர்.
அதுமட்டுமல்ல இருவரும் பேரணியில் கலந்து கொண்டவர்களுடன் இணைந்து சிறிது தூரம் இருசக்கர வாகனத்தை ஹெல்மெட் அணிந்து ஓட்டி சென்றனர்.
ஹெல்மெட் ஒரு உயிர்க்காக்கும் கருவி. இருசக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் அதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே இந்த பேரணியில் கலந்து கொண்டே என்று கூறியுள்ளார் தான்யா ஹோப்.