V4UMEDIA
HomeNewsKollywoodமிஸ்டர் எக்ஸ் படப்பிடிப்பு துவங்கியது

மிஸ்டர் எக்ஸ் படப்பிடிப்பு துவங்கியது

விஷ்ணு விஷால் நடித்த எஃப் ஐ ஆர் படத்தை இயக்கியவர் மனு ஆனந்த். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மிஸ்டர் எக்ஸ் என்கிற படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் ஆர்யா, கவுதம் கார்த்திக் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மஞ்சு வாரியர் மற்றும் அனகா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

அசுரன், துணிவு படங்களைத் தொடர்ந்து மஞ்சு வாரியர் நடிக்கும் மூன்றாவது படம் இது. இந்த படத்தில் சரத்குமாரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.

Most Popular

Recent Comments