நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார்.

இந்தப் படங்களை முடித்துவிட்டு அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் சந்து மொண்டேட்டி என்பவர் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இது குறித்த தகவலை சம்பந்தப்பட்ட இயக்குனரே தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் தெலுங்கு இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஏற்கனவே நடிகர் கார்த்தி அப்படி தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கத்தில் நடித்து விட்டார்.

இந்த நிலையில் சூர்யாவும் தெலுங்கு இயக்குனரின் படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் சந்து மொண்டேட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கார்த்திகேயா 2 என்கிற படத்தை இயக்கியவர்.
அதுமட்டுமல்ல சில வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியான விஸ்மாயா என்கிற படத்தையும் தெலுங்கில் இவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.