V4UMEDIA
HomeNewsKollywoodஅர்ஜுன் தாஸ் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் சிவாத்மிகா ராஜசேகர்

அர்ஜுன் தாஸ் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் சிவாத்மிகா ராஜசேகர்

லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, மாஸ்டர் ஆகிய படங்களின் மூலம் வில்லனாக பிரபலமானவர் நடிகர் அர்ஜுன் தாஸ், சமீபத்தில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அநீதி படத்தில் கதாநாயகனாகவும் புரமோஷன் பெற்றார்.

அதேபோல தெலுங்கு திரை உலகில் ஆக்சன் நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராஜசேகர். அவரது மனைவி நடிகை ஜீவிதா.. இவர்களின் மகள் ஷிவாத்மிகாவும் நடிகையாக சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இணைந்துள்ளார் ஷிவாத்மிகா.

இந்த படத்தை சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் காளி வெங்கட், நாசர், அபிராமி, ரமேஷ் திலக், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர், டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Most Popular

Recent Comments